68ஆவது சுதந்திர தினத்தை ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்!
- Muthu Kumar
- 30 Aug, 2025
(இரா.கோபி)
கோலாலம்பூர், ஆக.30-
நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை அனைவரும் ஒற்றுமையாகக் கொண்டாட வேண்டும் என்று புத்ரா ஜெயா போலீஸ் அதிகாரி டிஎஸ்பி பாலு முனியப்பன் தெரிவித்தார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்பதை தெளிவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சுதந்திரம் எப்படிக் கிடைத்தது. அது கிடைப்பதற்கு நம் மூவின மக்களும் எவ்வளவு துன்பத்தையும் துயரத்தையும் எதிர்கொண்டனர் என்று விளக்கமாக கூற வேண்டும் என்று அவர் கூறினார்.
நம் நாட்டில் மூவின மக்களும் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் அமைதியாகவும் சுபிட்சமாகவும் வாழ இந்த நாட்டை அரசாங்கம் வழிநடத்தி வருகிறது. சுதந்திர தினத்தின் முதல் நாள் இரவு பல வீடுகளில் விருந்துபசரிப்பு நடத்துவார்கள். அப்படி நடத்துபவர்கள் எல்லாரும் பாதுகாப்போடு கொண்டாட வேண்டும்.ஒரு சிலர் பட்டாக வெடித்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பணியில் உள்ள காவல் துறையினர் சுதந்திர தினத்தின் முதல் நாள் மக்கள் குடியிருப்புப் பகுதியை கண்காணித்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் விழிப்போடு இருக்க வேண்டும். கடந்த காலங்களில் சுதந்திர மாதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியைப் பறக்க விடுவார்கள். ஆனால் இவ்வாண்டு இது மிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தமது சுதந்திர தின வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார்.மேலும் ஏஎஸ்பி சந்தர், இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன், சார்ஜன் மேஜர் மோகன், கோப்ரல் நாகவிலாஷினி, கோப்ரல் வினோஷினி, லான்ஸ் கோப்ரல் தமிழ் ஆகியோரும் சுதந்திர தின வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



