பெரிக்காத்தானைக் கைப்பற்றுவோம்! துரோகிகள் நண்பர்களாக இருக்க முடியாது! - பாஸ் இளைஞர் பிரிவு சூளூரை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 29: பெரிக்காத்தான் நேஷனலை இனி பாஸ் கைவசப்படுத்த வேண்டும் என, பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அப்னான் ஹமிமி தைப் அசமுடின் அதிரடியாக அறிவித்துள்ளார்.  கூட்டணிக் கட்சியான பெர்சாத்து, முன்னாள் பெர்லிஸ் மந்திரி புசார் சுக்ரி ராம்லிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதற்காக சம்பந்தப்பட்ட  ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.

பெர்சாத்து அதன் மக்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்பது தெளிவாகிறது என்று அலோர் ஸ்டாரின் எம்.பி. யுமான அவர் கூறினார்.

 இந்த விவகாரத்தில் பாஸ் அதன் மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தது போல், கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பெர்சாத்து உறுப்பினர்களுக்கும் நடவடிக்கை தேவை என்று  வலியுறுத்தியும்,  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரின் பெயர் மந்திரி புசார் வேட்பாளராகச் சமர்ப்பிக்கப்பட்டது.

 எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த இரண்டு விஷயங்களும் அவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்களை ஆசீர்வதித்ததைக் குறிக்கின்றன என்று அவர் இன்று  தமது முகநூல பதிவில் கூறினார்.

கூட்டணித் தலைவராக பாஸ் கட்சி, பெரிக்காத்தான் நேசனலைக் கைப்பற்ற வேண்டிய நேரம் இது என்றும், கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூட்டணித் தலைவராகப் பணியாற்றி வருவதாகவும் அஃப்னான் கூறினார்.

துரோகிகள் நண்பர்களாக இருக்க முடியாது. பலவீனமானவர்கள் தலைமை தாங்க முடியாது. நம்மைக் காட்டிக் கொடுத்தவர்கள் தொலைந்து போகலாம். பலவீனமானவர்கள் பதவி விலக வேண்டும், என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *