நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்ப நிலை லெவல் 1 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- Shan Siva
- 27 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 27: பெர்லிஸ் முழுவதற்கும், கெடாவின் சில பகுதிகளுக்கும், பேராக், கிளந்தான்,
சபா மற்றும் சரவாக் போன்ற பல இடங்களுக்கும்
லெவல் 1 வெப்ப வானிலை எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
கெடாவில் குபாங்
பாசு, போகோக் சேனா, பெண்டாங், பாடாங் தெராப், கோத்தா ஸ்டார், கோல முடா மற்றும்
சிக் மாகிய்ய பகுதிகளும்,
பேராக்கில் உலு பேராக், கிளந்தானில் மாச்சாங் மற்றும் பாசிர் மாஸ் சபாவில் பியூஃபோர்ட் மற்றும் சரவாக்கில் கபிட், லிம்பாங் மற்றும் மருடி ஆகிய பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும்
பகுதிகளாக மெட் மலேசியா அறிவித்துள்ளது.
ஒரு பகுதியில்
அதிகபட்ச தினசரி வெப்பநிலை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு 35 டிகிரி செல்சியஸ் மற்றும் 37 டிகிரி செல்சியஸ் வரை அடையும் போது நிலை 1
எச்சரிக்கை விடுக்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



