தாய்லாந்தில் கொள்ளையிட்ட எழுவர் மலேசியாவுக்குள்... போலீஸ் தீவிர வேட்டை
- Shan Siva
- 30 Oct, 2025
கோலாலம்பூர், அக் 30: தாய்லாந்தின் சுங்கை கோலோக்கில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஒரு தங்கக் கடையில் நடந்த கொள்ளையில், RM 46 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் சென்ற ஏழு சந்தேக நபர்கள் மலேசியாவுக்குத் தப்பி வந்ததாக நம்பப்படுகிறது.
10 சந்தேக
நபர்களில் மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நான்காவது ராணுவப்
பகுதியின் தளபதி நோராதிப் பாயினோக் கூறினார்..
பலரின் உதவியுடன்
மலேசியாவிற்குள் நுழைந்த மற்ற ஏழு பேரும் பல கார் திருட்டுகளில் ஈடுபட்டதாக
நம்பப்படுகிறது.
சுங்கை கோலோக்கில் உள்ள
பிக் சி ஷாப்பிங் வளாகத்தில் நடந்த கொள்ளையைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையைத்
தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.
அக்டோபர் 5 ஆம் தேதி நடந்த கொள்ளையில், துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஒரு குழு
இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி 9 கிலோவுக்கும்
அதிகமான தங்கத்துடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது,
சுமார் 20 பேர் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையின்
ஒரு பகுதியாக இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம் என்று தாய்லாந்து போலீசார் நம்புவதாக நோராதிப்
கூறினர்.
சட்ட அமலாக்கத்தை
சீர்குலைக்க சூப்பர் மார்க்கெட் அருகே ஆணி நிரப்பப்பட்ட குண்டுகளை வைத்தது உட்பட,
இந்தக் குழு குற்றத்தை மிக நுணுக்கமாகத்
திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



