கோலாலம்பூரில் புதிய பேருந்து நிறுத்தங்கள்! RM 15 லட்சம் ஒதுக்கீடு
- Shan Siva
- 15 May, 2026
கோலாலம்பூர், மே 15: பேருந்து நிறுத்தங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகராட்சிக்கு (DBKL) கூடுதலாக RM15 லட்சம் நிதி ஒதுக்கீட்டிற்கு போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
கோலாலம்பூரில் பல இடங்களில் முறையான பேருந்து நிறுத்த வசதிகள் இல்லாதது குறித்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
முறையான பேருந்து நிறுத்தங்கள், பிரத்யேக இடங்கள் அல்லது வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால், நகரவாசிகள் அடிக்கடி சாலையோரத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது போன்ற புகார்களை அடுத்து, இதை சரிசெய்ய விரும்புவதாக இன்று சிகாம்புட் வடக்கு பேருந்து நிலையத் திறப்பு விழாவில் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தையும் கட்டுவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ RM15,000 முதல் RM30,000 வரை செலவாகும் என்றும், இந்த நிதி ஒதுக்கீடு 100 பேருந்து நிறுத்தங்களை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் லோக் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



