மே மாதத்திற்குள் தனியார்துறை மருத்துவர்களுக்கான புதிய ஆலோசனைக் கட்டணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 14-

தனியார்துறை மருத்துவர்களுக்கான புதிய ஆலோசனைக் கட்டண விகிதங்கள் மே மாதம் முதல் தேதிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஸூல்கிப்ளி அமாட் நேற்று தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டு தனியார்துறை சுகாதாரக் கவனிப்பு வசதிகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்கீழ் காணப்படும் ஆலோசனைக் கட்டணங்களை உடனடியாக மறுஆய்வு செய்வதற்கான உத்தரவு தமக்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய ஆலோசனைக் கட்டணம் 10 வெள்ளிக்கும் 35 வெள்ளிக்கும் இடைப்பட்டதாகும். இது 1992ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ளது.

தனியார் துறை மருத்துவர்களுக்கு நியாயமான வகையிலும் ஏற்புடைய வகையிலும் ஆலோசனைக் கட்டணம் கிடப்பதை இப்புதிய கட்டண விகிதம் உறுதிசெய்யும் என்று நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஸூல்கிப்ளி தெரிவித்தார்.

ஆலோசனைக் கட்டண மறுஆய்வுக்கு வாழ்க்கைச் செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றம் (நக்கோல்) மட்டும் இணக்கம் தெரிவிக்கவில்லை. மாறாக,
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்கூட அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றார் அவர்

மருந்துகளின் விலை பட்டியலை காட்சிக்கு
வைக்கத் தனியார் மருத்துவமனைகளும் மலேசியத் தனியார் மருத்துவமனைகள்
சங்கமும் தயாராக உள்ளன.அதே வேளையில், ஏழாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள கட்டண விகிதங்களில் மாற்றம் செய்தால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப் போவதாக தனியார்துறை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் என்று ஸூல்கிப்ளி கூறினார்.

மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்முனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அம்முயற்சியின் ஒரு பகுதியாக தனியார் மருத்துவர்களின் ஆலோசனை கட்டண விகிதத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்றார் ஸூல்கிப்ளி.

Kadar bayaran konsultasi baharu bagi doktor swasta akan diumumkan sebelum 1 Mei, kata Menteri Kesihatan, Zulkifli Ahmad. Kajian semula kadar bayaran ini dibuat di bawah Akta Kemudahan dan Perkhidmatan Jagaan Kesihatan Swasta 1998, dengan persetujuan Perdana Menteri dan Naccol.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *