அக்மாலுக்குப் பின்னால் நாங்கள் நிற்போம்! - பெர்சாத்து இளைஞர் பிரிவு
- Shan Siva
- 20 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 20: பொதுமக்களை அச்சப்படுத்தும் நோக்கத்துடன்
அறிக்கைகளை வெளியிட்டதாக, வரும்
வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்
டாக்டர் அக்மல் சல்லேவுக்கு, பெர்சாத்து கட்சியின்
இளைஞர் பிரிவுத் தலைவர் ஹில்மான் இடாம் தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதே
குற்றச்சாட்டுக்கு இன்று காலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஹில்மான், இந்த சவாலை
எதிர்கொள்வதில் பொறுமையாகவும் வலுவாகவும் இருக்குமாறு அக்மாலுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பெர்சத்து இளைஞர்
சகாக்களும் தாமும் அவருடன் ஒற்றுமையாக நிற்போம் என்றும், இந்த சவாலை எதிர்கொள்வதில் அவர் வலுவாகவும் பொறுமையாகவும்
இருப்பார் என்று தாம் நம்புவதாகவ் உம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது இளைஞர்களின்
பலங்களில் ஒன்று இலட்சியவாதம் மற்றும்
கொள்கைகள் என்று தாம் எப்போதும் கூறி வருவதாகக் கூறிய அவர், எனவே, நமது
கொள்கைகளையும் இலட்சியங்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் போராட முடியும் என்று தாம்
நம்புவதாக அவர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஜூலை 30 அன்று டிக்டோக் வீடியோவில் பொதுமக்களுக்கு யத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு
அறிக்கையை வெளியிட்டதாக ஹில்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல் தேசியக் கொடி
விவகாரம் தொடர்பாகப் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அக்மால் மீதும் வரும்
வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



