கோயிலை இடிப்பவர்களுக்கு எதிராக புதிய அமைப்பு! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஏப் 8:  கடந்த வாரங்களில் அன்வார் விடுதலை குறித்தும், கோயில் விவகாரத்தில் 'கோயில் ஹராம்' என்று அன்வார் சொன்னதற்கு அன்வார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தனது எண்ணங்களையும், நடந்த சம்பவங்களையும் 'மலர் டிவி'யில் ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் பகிர்ந்திருந்தார்.
இதற்குப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவேற்றம் செய்திருந்தார்கள். அந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு  கருத்து தெரிவித்த சிலர், அதில் ஓம்ஸ் பதவிக்கு ஆசைப்படுவதாகவும் . ஏன் பழைய கதையைப் பேசுகிறார் என்றும் வினவியிருந்தீர்கள்.

உண்மையில் ஓம்ஸ் தியாகராஜனிடம் பலரும் வைக்கும் கேள்வி.. ஏன் இன்னும் விருதுகள் பெறாமல் இருக்கிறீர்கள். வாய்ப்புகள் இருந்தும் ஏன் அரசியல் பதவி வேண்டாம் என்கிறீர்கள்? என்பதுதான். 

அதற்கு அவர் எனக்குப் பதவி ஆசை எல்லாம் கிடையாது. பட்டம் பதவி இருந்தால்தான் சேவை செய்யணும் என்றில்லை. பட்டம் பதவி இல்லாமலும் சேவை செய்யலாம் என்பதற்கு உதாரணமாக பல இடங்களில் பேசியிருக்கிறேன் என்றுதான் பதில் தருவார். தேடி வந்த உயரிய பட்டங்களையும், பதவிகளையும் அவர் நிராகரித்தார் என்பதே உண்மை.

அவருடன்  இருப்பவர்களுக்கு அது தெரியும். அரசியல் செயல்பாடுகளுக்கும், சில அரசியல் நகர்வுகளுக்கும் அவர் தேவையாக இருப்பதாகப் பலரும் கருதுவதாலும், பலரும் அவரை  சந்திப்பதாலும் அரசியல் நீரோட்டத்தில் அவரும்  இருப்பதுபோல் ஒரு பிம்பம் தெரிகிறது. ஆனால், அரசியல் பதவிகள் தேவையில்லை என்பதில் அவர்  தெளிவாகவே இருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்தக் காணொளியை அவர் வெளியிட்டதற்குக் காரணம், நமது சமயத்தின் மீதான அவரது தீராப் பற்றுதான். அண்மைய கோயில் இடிப்புச் சம்பவங்கள், போராட்டங்கள், எல்லாவற்றுக்கும் மேல் பிரதமரே கோயில் ஹராம் என்று சொன்னது என எல்லாம் அவரைப் பாதித்ததால் பிரதமருக்கு தனது கோரிக்கையை முன் வைத்தார். 

இந்நிலையில் அந்தக் காணொளிக்கு பதில் தரும் விதமாகவும், புதியதாய் ஓர் அமைப்பினைத் தொடங்குவது குறித்தும் மனம் திறந்தார் ஓம்ஸ் பா.தியாகராஜன்.
முதலில் அன்வார் இன்று பிரதமராக அரியணையில் அமர முக்கிய காரணமே நமது  இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 84 விழுக்காடு வாக்குகள்தான் எனவே அவர்களுக்கும்,  அதேபோல் அன்வாரை நிராகரித்து வாக்கு செலுத்தாமல் இருந்த மீதமுள்ள  16 விழுக்காட்டினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

உண்மையைத் தக்க நேரத்தில் சொல்ல வேண்டும் என்பதால்தான் அந்தப் பதிவுகளை முன்வைத்தேன். இதுவரைக்கும் சொல்லாத கதையைச் சொன்னேன்.
அன்வாருக்கும் எனக்கும் நட்பு இருப்பது உண்மைதான் என்றாலும், சமய விவகாரத்தில், குறிப்பாக நமது ஆலய விவகாரம் தொடர்பாக அவர் சொன்ன 'கோயில் ஹராம்' சொல் என்னை மிகவும் பாதித்தது. சமயமா? நட்பா? என்று வரும்போது சமயம்தான் முக்கியம் என நினைத்ததால், அன்வார் நமது இந்தியர்கள் மத்தியில் வருத்தத்தைப் பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அன்வாரை நாம்தான் பிரதமர் ஆக்கினோம். அன்வாரை குறிப்பாக  நான் தேர்வு செய்யக் காரணம், நாட்டின் நிலைமை மிக மோசமாகச் சென்றதில் உங்களைப் போலவே எனக்கும் கவலைதான். 

ஊழல், அராஜகம், துரோகம் என நாட்டின் அரசியல் சீர்கெட்டுக் கிடந்தது. இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகத்தான் இன்னொரு பிரதமர் வந்தால். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நினைத்தேன். அப்படிப் பார்க்கையில் அன்வார் சிறந்தவராக இருப்பார் என்றே தோன்றியது.

பிரதமராக இருந்த பலர் சிறைச்சாலை சென்றிருக்கிறார்கள். ஆனால் சிறைச்சாலைக்குச் சென்ற அன்வார் இன்பம், துன்பம், நல்லது, கெட்டது, துரோகம் என எல்லாவற்றையும்  அனுபவித்துவிட்டார். அப்படிப்பட்டவர் தலைமை ஏற்றால் சிறப்பாக இருக்கும் என நம்பினேன்.

அதே போல் அன்வார் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. மற்றவர்களைப் போல் மக்கள் வரிப்பணத்தை அவர் மோசம் செய்ததில்லை.

எனவே, புதிய நபர் வேண்டும், புதிய அரசியல் வேண்டும் என்ற காரணத்தால், அதற்கு அன்வார்தான் சரியாக இருப்பார் என்று கருதி, அவரை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர சிலரோடுசேர்ந்து  முயற்சி செய்தேன்.

அதன்பின் நடந்த விவரங்களை முந்தைய காணொளிகளில் பதிவு செய்துள்ளேன்.

நமது சமுதாயமும் அதே எண்ணத்தைக் கொண்டிருந்ததோடு, அன்வாரைப் பிரதமராக்க கடுமையாக உழைத்தார்கள். மாற்று சக்தி என்று நம்பி 84 விழுக்காட்டினர் அவருக்கு ஆதரவளித்து அரியணையில் அமர்த்தினார்கள். 

இதனை அடுத்து, துன்பத்தை அனுபவித்த மக்களுக்கு, அன்வார்  இன்பத்தை அளிப்பார் என்று எண்ணினோம்.

ஆனால், எதிர்பார்த்த முழு வெற்றி அன்வாருக்கு அமையவில்லை, விமர்சனம் செய்து வந்த பாரிசானுடனேயே கூட்டணி வைக்க வேண்டிய நிலை... இந்நிலையில் அவரின் முடிவுகள் சுயமாக எடுக்கப்படும் சூழல் அமையவில்லை. ஜாஹிட்டுக்கு அன்வார் தேவை, அன்வாருக்கு ஜாஹிட் தேவை என்ற அடிப்படையில்தான் அன்வார் பிரதமர் ஆனார் என்பதுதான் உண்மை.

தேர்தலுக்கு முன்னால் 'நான் ஆணையிட்டால்' என்று மேடையில் பாடி இந்தியர்களின் மனம் கவர்ந்தார். நம்மை உற்சாகப்படுத்தினார். மலாய்காரக, சீனர்கள் இந்தியர்க, கடாசான்ஆரர்கல் அனைவரும் எனது பிள்ளைகள் என மார்தட்டி வசனம் பேசினார். ஆனால், இப்போது அப்படிச் சொல்வாரா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் தெரிகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு தூரநோக்குச் சிந்தனையில் அவர் செயல்படும் விதம், உலக தலைவர்கள் மத்தியில் மதிக்கப்படும் விதம் பாராட்டுக்குரியது என்றாலும், அவரை ஆட்சியில் அமர வைத்த 84 விழுக்காடு இந்தியர்கள்மத்தியில் அவர்  மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதை நானும் அறிகிறேன். 

அந்த் 84விழுக்காட்டில் நானும் ஒருவன் என்பதால், எனவே உங்களுக்கு இருக்கிம் வருத்தம் எனக்கிம் இருக்கிறது.

அன்வாருக்கு ஆதரவளித்த 84 விழுக்காட்டினர்  நினைப்பதைப்போல்தான் நானும் நினைக்கிறேன். உங்களின் எண்ணமே எனது எண்ணமுமாக இருக்கிறது. இப்போது எப்படி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லையோ, அந்த நிலையில்தான் நானும் இருக்கிறேன். இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

உங்களப் போலவே எனக்கும் அன்வார் மீது வருத்தம்தான். அதிலும் 'கோயில் ஹராம்' என்று அவர் சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாதது. 
எனவேதான், அன்வார் இந்தியர்களிடம் தனது வருத்தத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினேன்.

அவரை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்த 84 விழுக்காடு இந்தியர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தால், அவர்களின் மனதை அந்த வார்த்தைப் புண்படுத்தியிருக்கும் என்பதை அன்வார் உணர்ந்திருந்தால், இந்தியர்களிடம் அன்வார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஊடகம் வாயிலாகவே தெரிவித்துவிட்டேன். 

மகாதீர் பிரதமராக இருந்தபோது எப்படி நமது சமுதாயத்தைப் பார்த்து 'கெலிங்' என்று சொல்லிவிட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டாரோ, அதேபோல் அன்வாரும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரினேன். 

அன்வார் அப்படி வார்த்தையை விட்டதால்தான் ஜம்ரி வினோத் போன்ற சில கோமாளிகள் பிரதமரே சொல்லிவிட்டார் நாம் சொல்வதில் என்ன தவறு என்று பிரச்னையைப் பெரிதாக்கி சர்ச்சைகளை அதிரிகரித்து வருகிறார்கள்.

அன்வாரின் அந்த வார்த்தைதான் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல், ஜம்ரி வினோத், தமிம் தாரி என பற்றி எரியச் செய்கிறது. நாளுக்கு நாள் அவர்களின் செய்ல்பாடுகள். கருத்துகள் மேலும் மேலும் விஷத்தைக் கக்குகின்றன. இப்போது நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.

எங்கள் குல தெய்வத்தை, எங்களின் உயிர் போன்ற தெய்வ உருவத்தை அதன் அடையாளங்களை அர்ப்பமாக நினைத்து காலால் உதைப்பதும், எங்கள் மக்களின் வியர்வை, ரத்தம், நம்பிக்கை, பணத்தால் கட்டப்பட்ட புனித தலத்தை இடித்து நொறுக்குவதும், அதற்கென பிரத்தியேகமாக அமைப்பினைத் தொடங்கி, பணம் வசூலித்து, எந்திரம் கூடம் வாங்கியிருப்பதும் எந்த அளவுக்கு இந்த நாட்டின் முதுகெலும்பாகத் திகழும், திகழ்ந்த இந்தியர்களை இழிவுபடுத்த நினைக்கிறாகள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணங்களில் ஒன்று பிரதமர் சொன்ன அந்த வார்த்தையும்தான்.

எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்துவது இதுதான். இந்திய சமுதாயத்தினரிடம் வருத்தம் தெரிவிப்பதோடு, இனிமேலும் யாரேனும் கோயில் ஹராம் என்று சர்ச்சையைக் கிளப்பினால் சொஸ்மா சட்டம் பாயும் என்று அன்வார் அறிவிக்க வேண்டும். 
இது ஒன்று நடந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்.

அப்படித் தீர்வு காண முடியவில்லை என்றால், நானும் ஒரு நடவடிக்கையில் இறங்குவேன் என்று, ஓம்ஸ் பா.தியாகராஜன் அதிரடியாய் ஒரு திட்டத்தைச் சொன்னார்.

அது யாரும் எதிர்பார்க்காத ஆச்சரிய வெடிகுண்டாய் திகிலடையச் செய்தது.

அண்மையில் ரவாங்கில் உள்ள ஓர் இந்து கோயிலை உடைத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  தலைமறைவாக இருக்கிறார், வெளிநாட்டில் இருக்கிறார் என்றுதான் போலி நாடகம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் உள்ளூரில் இன்னும்சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கிறாகள்.

எப்படி இன்னும் இந்திராகாந்தியின் கணவர் மதம் மாறிய ரிடுவான் அப்துல்லா தலைமறைவாகவே இருக்கிறாரோ, அப்படித்தான் கடைசி வரை இந்தசர்ச்சைவாதியும் தலைமறவு என்றே சொல்வார்களோ என்னவோ? என ஓம்ஸ் பா.தியாகராஜன் சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது மனிதர் ஒருவர் ஒரு சமூகத்தையே அவமானப்படுத்தும் விதமாக, இந்தியர்களும் இந்த நாட்டுக் குடிமக்கள் என்கிற சுய அறிவுகூட இல்லாமல், கோயிலை உடைப்பதற்காகவே ஓர் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார் என்றால், நான் மட்டும் ஏன் ஓர் அமைப்பைத் தொடங்கக்கூடாது.
அவர்கள் எங்கு கோயிலை இடிக்கக் கிளம்புகிறார்களோ அங்கே அவர்களுக்குப் பாடம் புகட்ட, ஒரு சிறப்பு அமைப்பை நான் ஏன் உருவாக்கக்கூடாது? என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

அவர்களின் நடவடிக்கைகளுக்கு சட்டத்தில் இடம் உள்ளது என்றால், 3 ஆர் எனும் சட்டத்தை கொச்சைப்படுத்திய, அரசாங்கத்தை  அவமானப்படுத்திய அத்தகையவர்களை அர்சாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றால்,அதே 3 ஆர் சட்டத்தை பாதுகாக்க, சட்டத்தை அவமதிக்கும் அவர்களுக்கு நியாயம் கற்பிக்க நானும் ஓர் அமைப்பைத் தொடங்கப்போகிறேன். அவர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றால் நான் அதற்குத்  தயார்  என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.  

நிலத்துக்கு உரியவர் கூட கோயிலை அப்புறப்படுத்த உரிமை இருக்கு? ஆனால், இதில் மூன்றாவது மனிதனின் தலையீடு ஏன்?

இத்தகைய கோமாளிகளுக்குப் பாடம் புகட்ட, இனியும் இது போன்று அவர்கள் அத்துமீறினால் நிச்சயம் ஓர் அமைப்பு தொடங்கப்படுவது உறுதி. அதன்பின் கோயிலை எப்படி அவர்கள் உடைப்பார்கள் என்று பார்க்கலாம் என ஓம்ஸ் பா.தியாகராஜன் வெளிப்படையாகவே எச்சரித்தார். 

அரசு கவனிக்க வேண்டிய விவகாரத்தை, தனிமனிதன் கையில் எடுத்து, அதை அரசும் கண்டுக்காமல் இருந்தால், அரசு அந்த செயலை அனுமதிக்கிறதா? இடித்து எங்கள் சாமிகளைக் கொலை செய்துவிட்டார்கள். உரிய நடவடிக்கை இல்லை. நீங்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையாக அது அமையும் என்று ஓம்ஸ் பா தியாகராஜன் கூறினார். 

அன்வார் தன்னை தூக்கிவிட்ட ஏணியை மறந்துவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.

நஜிப் விஷயத்தில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவரிடம் நல்லதையும் பார்த்திருக்கிறோம் கெட்டதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியர்களுக்கு அவரால் ஏராளமான நன்மைகளும் கிடைத்திருக்கின்றன.

சமயதிற்கு மதிப்பளித்து  போல் நஜிப் வேஷ்டி ஜிப்பா அணிந்து கோயிலுக்கு வருவார். மலாய்காரர்களுக்குப் பயப்படமாட்டார். பிற சமயத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். ஆனால் அன்வார் அப்படி இருக்கவில்லை. அன்வாரின் நடவடிக்கை மலாய்காரர்களுக்காகவே இருப்பதுபோல் தெரிகிறது.

அன்வார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.அப்போதெல்லாம் குத்து விளக்கு ஏற்றுவார், தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நின்று பாடுவார்.

ஆனால், பிரதமர் ஆனதும் நிகழ்ச்சிக்குப் போகிறார் என்றால், குத்துவிளக்கு ஏற்றுதல், தமிழ் வாழ்த்து போன்ற நடவடிக்கைகளை அவர்  நிக்ழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே நடத்தி முடித்துவிட வேண்டும்  என்று உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தற்போது அறிகிறேன்.

உண்மையில் அன்வாருக்கு மத உணர்வு மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

இல்லையென்றால் கோயில் ஹராம் என்ற  வார்த்தையை அவர் விட்டிருக்கமாட்டார். அப்படியே சொல்லியிருந்தாலும் இந்தியர்கள் மத்தியில் அவர் அதற்கு வருத்தம் தெரிவித்திருப்பார்.

இனியும் இது பற்றி பேசமாட்டேன்.  இதுதான் கடைசி என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

அன்வார் பிரதமர் ஆனதும், டத்தோஸ்ரீ நீங்கள்தான் மற்ற பிரதமர்களை விட சிறந்த பிரதமர் என்று விளங்க வேண்டும் என வழ்த்தினேன். ஆனால் அதெல்லாம் பகல் கனவு என்று தற்போது தோன்றுவதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 15 பள்ளிகளுக்கும் மேல் ஓம்ஸ் பா.தியாகராஜன் என்ற பெயரிலான திறந்தவெளி மண்டபங்கள்,
நாட்டின் மிகப்பெரிய பள்ளியான சிம்பாங் லீமா பள்ளியில் இன்றும் ஓம்ஸ் தியாகராஜன் அறிவகம் சொல்லிக்கொண்டிருக்கும் பிரமாண்ட இரட்டை மாடிக் கட்டிடம், பல கோயில்களில் பெரும் பெரும் நன்கொடைகள், நம்சமுதாயத்தினரின் கல்வி மேம்பாட்டுக்காக தங்கப் பதக்கம், ஊக்கத் தொகை, போட்டி நிகழ்வுகள், எண்ணற்ற மக்களின் கண்ணீரைத் துடைக்கும் அன்றாடச் சேவைகள், எல்லாவற்றுக்கும் மேல் நாட்டின் உச்சபச்ச தலைமக்கு நெருங்கிய நண்பர்... இப்படி ஓர் சக்தி மிக்க ஆளுமையான ஓம்ஸ் தியாகராஜன்... நானும் ஓர் அமைப்புத் தொடங்கப் போகிறேன் என்று சொன்னபோது, ஆச்சரியம் மட்டும் அல்ல... ஆடித்தான் போனோம் நாங்கள்.


சமுதாயத்தின் மீதும், சமயத்தின் மீதும் ஓம்ஸ் பா.தியாகராஜன் தீராப் பற்றுக்கொண்டவர் என்பதை பல சம்பவங்கள் மற்றும்  நிகழ்வுகள் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம். 

பெரிதாக ஊடக வெளிசசம் இல்லாததால், அவரும் அதைத் தவிர்ப்பதால், மக்களுக்குத் தெரியவில்லை அவரின் நிறைவான சேவைகளும், சமுதாயத்தின் மீதான அவரின் பேரன்பும்.

மிகப்பெரும் தொகையை ஆலயங்களுக்கு வழங்கியிருக்கிறார். ஆனால், அது குறித்து தம்பட்டம் வேண்டாம் என்று அன்போடு கோபம் கொள்வார். எனவே அவர் வழங்கிய தொகையின் அளவை எங்களால் வெளியிட முடியவில்லை. 

அதோடு இவரது சேவைகள் அனைத்துமே, இவரது சொந்தப்பணத்தில், அரசாங்கத்திடம் முறையாக வரி செலுத்தப்பட்டுதான் மேற்கொள்ளப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

இலவச சமய வகுப்புகள் நடத்துகிறார். ஆச்சரியம் என்னவென்றால் மாதம் நான்கு வகுப்புகளுக்கும் முழு வருகை தருவதோடு,நேரம் தவறாமல் வரும் மாணவர்களுக்கு மாதம் RM 30 இவரே வழங்குகிறார்.

இதை எல்லாம்  ஏன் சொல்கிறோம் என்றால், அவர் ஏதோ பதவிக்கு ஆசைப்படுகிறார், அதுதான் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று சிலர், சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.  அதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

உண்மையில், இந்த மாமனிதர் கைகாட்டி நிறைய அரசியல்வாதிகளை உருவாக்கியிருக்கிறார்.  இன்னும் இவரது இல்லம் தேடி வரும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். அப்படியானால் இவரால் அரசியல்வாதி ஆக முடியாதா? அது தேவை இல்லை என்பதே இவரது எண்ணம்.

தனது தந்தையின் மீது தீராப் பற்று கொண்டவர் அதனால் தந்தையின் வழியில், 'சமுதாயமும்; சமயமும்' இருகண்கள் என செயல்பட்டு வருகிறார்.

இத்தகைய ஒரு மனிதரே, இப்படி கோயிலை உடைப்பவர்களுக்கு எதிராக ஓர் அமைப்பத் தொடங்கப் போகிறேன் என்று சொல்லியிருப்பது வியப்பாய்தான் இருக்கிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *