இரண்டு மாதங்களுக்குள் புதிய கட்சியா?! நண்பர்களுடன் ஆலோசனை - ரஃபிஸி ரம்லி
- Shan Siva
- 25 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 25: அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பது குறித்து முடிவெடுப்பேன் என்றும், இது ஒருதலைப்பட்சமான முடிவாக இருக்காது என்றும் PKR முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு
உள்ளேயோ அல்லது வெளியேயோ சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த வழியை இன்னும்
ஆராய்ந்து வருவதாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
நண்பர்களுடன்
கலந்தாலோசித்த பிறகு ஜூன் மாதம் ஒரு முடிவை எடுப்பதாக தாம் அவர்களுக்கு
உறுதியளித்திருப்பதாக, அஸாம் பாக்கிக்கு எதிரான
பேரணியில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தனதுமுடிவு, நாடாளுமன்ற மற்றும் பிரிவு மட்டத்தில் உள்ள தனது
நண்பர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இது நாம் அனைவரும் சேர்ந்து மதிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.
இது அதிகார வேட்கை பற்றியது அல்ல, நாங்கள்
மாற்றங்களைக் காண விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
கடந்த மே மாதம்
துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படத் தவறிய பிறகு, PKR தலைமையுடனான ரஃபிஸியின் உறவுகள் மோசமடைந்தன. அன்று முதல் அவர்
அரசாங்கத்தையும் கட்சியையும் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.
அரசாங்கத்தையும்
கட்சியையும் விமர்சித்ததற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று பலமுறை அழைப்புகள்
விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது தொகுதியில்
பி.கே.ஆர் கட்சி இடைத்தேர்தலைத் திணிக்க முயல்வதாக அவர் சமீபத்தில் குற்றம்
சாட்டினார்.
நாடாளுமன்றம்
கலைக்கப்பட்ட பிறகு பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகி, தனது பண்டான் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக
ரஃபிஸி சூசகமாகத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



