நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியல் கூட்டணி; PN-இல் இருந்து விலகுவதற்கான சிக்னல் கொடுத்தார் முகைதீன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 18: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பெர்சாத்து புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் என்று அதன் தலைவர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பெர்சாத்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய கூட்டணியில் இகாத்தான் பிரிஹாட்டின் ரக்யாட் (IPR)-இல் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும் இணையும் எனத் தெரிவித்தார்.

அந்தக் கூட்டணியில், இப்ராஹிம் அலி தலைமையிலான புத்ரா கட்சியும், பி. ராமசாமி தலைமையிலான உரிமை கட்சியும் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பெர்சத்து தனியாக இருக்காது. புதிய, வலுவான அரசியல் கூட்டணியை உருவாக்குவோம். அந்தக் கூட்டணியே அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும்" என்று முகைதீன் கூறினார்.

அதேவேளை, PAS தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல்  கூட்டணி தனது அடிப்படை அரசியல் நோக்கத்திலிருந்து விலகிவிட்டதாகவும், பெர்சாத்து தலைமைத்துவத்தை ஓரங்கட்டுவதற்காக PAS அவதூறு பரப்பியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தாங்கள்தான் இஸ்லாமியக் கட்சி என்பதால், அவர்கள் ஒருபோதும் பொய் பேச மாட்டார்கள் என்றும், அவர்கள் எப்போதும் சரி; நாங்கள்தான் எப்போதும் தவறு என்ற மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள் என்று அவர் விமர்சித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *