வீணாகும் உணவுகள்... தடுக்கும் முயற்சியில் புதிய திட்டம்!
- Shan Siva
- 14 Oct, 2025
கோலாலம்பூர், அக் 14: வீடமைப்பு
மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சான KPKT, நிலையான தீபாவளி 2025 எனும் திட்டத்தின் மூலம் உணவு வீணாவதைத் தடுக்கும்
பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
விழாக்களின் போது விவேகமான உணவு மேலாண்மை குறித்து
சமூகங்களுக்கு அறிவுறுத்துவதோடு, மதிப்புமிக்க
உணவு கழிவுகளைத் தவிர்க்கும் பிரச்சாரத்தில் இந்த திட்டம் கவனம்
செலுத்துகிறது என்று வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித்துறை துணை அமைச்சர் டத்தோ ஐமான்
அதிரா சாபு கூறினார்.
வணிகர்களும் பார்வையாளர்களும் உணவை வீணாக்காமல் இருப்பதை
உறுதி செய்வதில் தங்கள் கவனம் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், குப்பைக்
கிடங்குகளுக்கு அனுப்பப்படும் திடக்கழிவுகளைக் குறைக்க விரும்புவதாக புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடந்த
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மலேசியா
தினமும் தோராயமாக 40,000 டன் திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது. அதில் 44.5% அல்லது சுமார் 18,000 டன் உணவு வீணாவதால் ஏற்படும்
கழிவு என்பதை அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



