புதிய MyKad மாற்றத்தால் அரசு உதவித் திட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படாது! JPN உறுதி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 14: அடுத்த மாதம் தொடங்கும் புதிய MyKad-க்கான மாற்றம், SARAமற்றும் மானிய விலையில் RON95 பெட்ரோலுக்கான BUDI95 திட்டம் போன்ற அரசாங்க உதவித் திட்டங்களின் விநியோகத்தைப் பாதிக்காதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க உதவிக்கான அமைப்புகளில் தற்போதுள்ள உதவி பெறுபவர்களின் பட்டியல் அப்படியே இருக்கும் என்றும், இந்த மாற்றச் செயல்பாட்டின் போது தகுதியான எந்தப் பயனாளியும் விலக்கப்பட மாட்டார் என்றும் தேசியப் பதிவுத் துறை (JPN) உறுதி செய்யும் என்று கூறியுள்ளது.

பகிரப்பட்ட தரவுகளின் நம்பகத்தன்மை பராமரிக்கப்படுவதையும், செயல்பாடுகள் சீராகத் தொடர்வதையும் உறுதி செய்வதற்காக, உதவி விநியோகத்திற்குப் பொறுப்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் முகமைகளுடன் இத்துறை நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *