கேரளாவில் வெடி விபத்து: 13 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்
- Surendran Sumdraraj
- 22 Apr, 2026
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பு மையத்தில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முண்டத்திக்கோடு பகுதியில் திருச்சூர் பூரம் திருவிழாவிற்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வெடிப்பு தொடர்ந்து பல வெடிப்புகளாக மாறி தீப்பரவலாகியுள்ளது. சம்பவத்தில் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், பல துறைகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விபத்தின் காரணம் குறித்து மஜிஸ்திரேட் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



