மாணவிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை ஒருவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான் மற்றொருவன் விசாரணை கோரினான்!
- Muthu Kumar
- 17 Oct, 2025
அலோர் காஜா, அக். 17-
மலாக்காவில் பள்ளி மாணவி ஒருவரை கூட்டாகச் சேர்ந்த பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் கூறப்படும் நான்கு மாணவர்களில் இருவர் மீது அலோர் காஜா பதின்ம வயதினர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்து அந்த இரண்டு மாணவர்களில் ஒருவன், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட வேளையில், மற்றொருவன் அதை மறுத்து விசாரணை கோரினான்.
அடுத்த மாதத்தில் எஸ்பிஎம் தேர்வில் அமர விருந்த 17 வயதுடைய இவ்விரு மாணவர்களும், கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை புரிந்தது. இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டது மற்றும் உடல் ரீதியிலான பாலியல் வன்கொடுமை புரிந்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கின்றனர். எனினும், இந்த இருவரில் ஒருவன், தம் மீது சுமத்தப்பட்ட அம்மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டான். அவற்றை மறுத்த மற்றொரு மாணவன் விசாரணை கோரினான்.
சம்பவ நாளில், 15 வயதுடைய மூன்றாம் படிவ மாணவியை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை புதிந்ததற்கான குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 375பியின் கீழ் அவ்விருவர் மீதும் முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 முதல் 30 ஆண்டுகளுக்கு இடையிலான சிறைத் தண்டனை வகுக்கிறது.
உடல் ரீதியில் புரிந்ததற்கான குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 377பியின் கீழ், அவர்களுக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு 20 ஆண்டுகள் வரைக்குமான சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி வழங்க அச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது.
உடல் ரீதியில் உடலுறவு புரிந்ததற்கான. 2017ஆம் ஆண்டு சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் செக்ஷன் 14(ஏ)இன் கீழ் அவ்விரு மாணவர்களும் குற்றம் புரிந்ததாக மூன்றாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
இக்குற்றத்திற்கும் 20 ஆண்டுகள் வரைக்குமான சிறைத் தண்டனை மற்றும் வழிவகுக்கிறது. பிரம்படி வழங்க அச்சட்டப் பிரிவு இம்மூன்று குற்றங்களையும் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் அலோர் காஜாவில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை செவிமடுத்த பின்னர், மாஜிஸ்டிரேட் டாக்டர் தியோ ஷு இ. அவ்விரு மாணவர்களையும் தலா 7 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவித்தார். இவ்வழக்கின் மறு விசாரணை வரும் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் இம்மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட மொத்தம் நான்கு மாணவர்கள் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



