ரயில் நிலையத்தில் பாலியல் சீண்டல்! ஆசாமி கைது
- Shan Siva
- 05 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 5: இந்த வாரத் தொடக்கத்தில் காஜாங் எம்.ஆர்.டி நிலையத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 24 வயது இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
சந்தேக நபர் நேற்று பண்டார் பாரு பாங்கி, தாமான் வெஸ்ட் கண்ட்ரியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
மேலதிக விசாரணைக்காக அவரை நீதிமன்றக் காவலில் வைக்க காவல்துறை முயலும் என்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் மானபங்கத்திற்கு எதிரான குற்றச் சட்டத்தின் பிரிவு 509-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக நஸ்ரோன் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை காலை 9 மணிக்கு எம்.ஆர்.டி நிலையத்தின் கேட் ஏ-யில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை 23 வினாடிகள் கொண்ட ஒரு வைரல் வீடியோ காட்டியது, இது சந்தேக நபரைத் தேட காவல்துறையைத் தூண்டியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



