பாலியல் விவகாரம் - Grab ஓட்டுநருக்குத் தடை
- Shan Siva
- 03 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 3: ஜொகூர் பாருவில் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக
துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கிராப் ஓட்டுநர் அனைத்து இ-ஹெய்லிங்
தளங்களிலும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அமைச்சு தீவிரமாகக் கருதுவதாகவும், அவரது பொது சேவை வாகன உரிமமான PSV-யை ரத்து செய்யுமாறு சாலைப் போக்குவரத்துத்
துறைக்கு அறிவுறுத்தியதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக்
கூறினார்.
PSV உரிமத்தை ரத்து செய்வதன் மூலம், ஓட்டுநர் இனி எந்த இ-ஹெய்லிங் தளத்திலும் இயங்க
அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான APAD மூலம், பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை
வலுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை முன்வைக்க, கிராப்
உட்பட அனைத்து இ-ஹெய்லிங் ஆபரேட்டர்களையும் அமைச்சு வரவழைக்கும் என்று அவர்
கூறினார்.
பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்யும் எந்தவொரு நடத்தையையும்
அமைச்சு பொறுத்துக்கொள்ளாது என்றும், குற்றவாளிக்கு
எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய பாதிக்கப்பட்டவருக்கு
ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் முன்னுரிமையாக இருக்க
வேண்டும். பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது அவர்களை மீறும் எந்தவொரு நடத்தைக்கும்
எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



