மகாதீர் மகன்களின் சொத்துகள் சட்டவிரோதமானது என்று நிரூபிக்கப்பட்டால் அதைத் திருப்பித் தர வேண்டும்! - அன்வார் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஜூலை 31: துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மகன்கள் தங்கள் செல்வத்தை தெளிவற்ற அல்லது சட்டவிரோத வழிகளில் சம்பாதித்ததாக நிரூபிக்கப்பட்டால், அதை அரசாங்கத்திடம் திருப்பித் தருமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

ஜகார்த்தாவில் இந்தோனேசிய பத்திரிகையாளர் நஜ்வா ஷிஹாப்புக்கு அளித்த பேட்டியில், டாக்டர் மகாதீரின் மகன்கள் குவித்துள்ள அசாதாரண செல்வம், குறிப்பாக இதில் உள்ள பெரும் தொகைகளைக் கருத்தில் கொண்டு, கவனிக்கப்பட வேண்டிய கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது என்று அன்வார் கூறினார்.

இந்த விஷயத்தை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) விட்டுவிட்டதாகக் கூறினார்.

யாருக்கும் எதிராகவும் தாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்லவில்லை. இந்த விஷயத்தை MACC-யிடம் ஒப்படைத்துள்ளேன் என்று அன்வார் தெரிவித்தார்.

ஆனால், 'மகாதிர் அல்லது அவரது மகன் RM1.2 பில்லியனையும், மேலும் RM4 பில்லியனையும் சொந்தமாக வைத்திருக்கிறேன்  என்று அவர்களே ஒப்புக்கொண்டால் - ஒரு குற்றச்சாட்டாக அல்ல, ஆனால் ஓர் அறிவிப்பாக - பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

நிதி எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் தெளிவாக விளக்க முடியாவிட்டால்,  அதைத் திருப்பித் தர வேண்டும்  என்று அவர் கூறினார்.

முன்பு, டான் ஸ்ரீ மொக்ஸானி மகாதிர் சுமார் RM1 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்தார், அதே நேரத்தில் மிர்சான் மகாதிர் RM246.2 மில்லியனை அறிவித்தார்.

அத்தகைய நபர்களைப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு குறித்தும் அன்வார் கேள்வி எழுப்பினார், ஊழலை எதிர்ப்பதில் அவர்கள் வகிக்கும் பங்கிற்கு இது முரணானது என்று விவரித்தார்.

எதிர்க்கட்சிகள் இதைப் பாதுகாப்பது விந்தையாக இல்லையா? ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் முன்னணியில் இருக்க வேண்டும், ஆனால் தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர்கள் பாதுகாக்கிறார்கள்.

ஒரு பிரதமர் அல்லது அமைச்சரின் மகன் ஏன் பில்லியன் கணக்கான ரிங்கிட் செல்வத்தை வைத்திருக்க வேண்டும்? இந்தக் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *