மலேசிய கால்பந்து சங்கம் அமைதியாக இருக்காதீர்! ஹன்னா இயோ வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 07 Oct, 2025
அக்தோபர் 7,
அனைத்துலகக் கால்பந்து ஆணையமான FIFA மலேசியக் கால்பந்து ஆணையத்தின் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மலேசியக் கால்பந்து ஆணையம் அமைதியாக இருக்க கூடாது என இளைஞர் விளையாட்டு அமைச்சர் HANNAH YEO தெரிவித்தார். மலேசிய அணியில் வெளிநாட்டினர்கள் பங்கேற்பதில் எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லை என்றாலும் வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மலேசியக் குடியுரிமையில் போலி ஆவணங்கள் பயன்பட்டுள்ளதா என்கிற விளக்கத்தை மலேசிய கால்பந்து ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என இளைஞர் விளையாட்டு அமைச்சர் HANNAH YEO வலியுறுத்தினார்.
இந்து அனைத்துலக அளவில் மலேசியாவின் நற்பெயரைக் கலங்கப்படுத்தி வருவதை மலேசியக் கால்பந்து ஆணையம் உணர்ந்திருப்பதாகவும் FAM இது குறித்து அனைத்துலகக் கால்பந்து ஆணையமான FIFA-விடம் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேல்முறையீட்டுக்கு முன்னதாக ஆவணங்கள் தொடர்பாக எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இருப்பதை மலேசிய கால்பந்து ஆணையம் உறுதிப்படுத்திருக்க வேண்டும் என்றும் இது குறித்து மலேசிய கால்பந்து ஆணையம் முறையான விளக்கம் பெற வேண்டுமென இளைஞர் விளையாட்டு அமைச்சர் HANNAH YEO வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



