ஹரிமாவ் மலாயாவுக்குப் புதிய தண்டனை: பிபா
- Tamil Malar (Reporter)
- 17 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 17-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயா விளையாடிய மூன்று அனைத்துலக நட்பு ஆட்டங்களின் முடிவுகளை ரத்து செய்து, அவற்றை 3-0 தோல்வியாக அறிவித்துள்ளது உலக கால்பந்து கூட்டமைப்பான FIFA. இது தகுதியற்ற வீரர்களை களமிறக்கியதற்கான 'கூடுதல்' தண்டனை ஆகும்.
மே 29ஆம் தேதி கேப் வெர்டேயுடன் செராஸ் கோலாலம்பூர் கால்பந்து மைதானத்தில் நடந்த போட்டி (முன்பு 1-1 சமநிலை), செப்டம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூருடன் புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் (முன்பு 2-1 வெற்றி), செப்டம்பர் 8ஆம் தேதி பாலஸ்தீனுடன் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் மைதானத்தில் (முன்பு 1-0 வெற்றி), ஆகிய மூன்று ஆட்டங்களிலும் மலேசியா 3-0 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய கால்பந்து சங்கம் (FAM) வெளியிட்ட அறிக்கையில், FIFA ஒழுங்கு குழு டிசம்பர் 12ஆம் தேதி கூட்டத்தில் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தது. தகுதியற்ற வீரர்களை களமிறக்கியது FIFA ஒழுங்கு விதி பிரிவு 19ஐ மீறியதாக கண்டறியப்பட்டது. கூடுதலாக, FAMக்கு CHF 10,000 (தோராயமாக 51,414 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



