கென்யா தலைநகர் நைரோபியில் இராணுவம், போலீஸ் குவிப்பு; பதற்றத்தில் நாடாளுமன்ற வளாகம்

top-news
FREE WEBSITE AD

நைரோபி, ஜூன் 26 –

கென்யா தலைநகர் நைரோபியில், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் மற்றும் முக்கிய சாலைகளில் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

2024-ஆம் ஆண்டு வரி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற ‘ஜென் Z’ இளைஞர் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒன்று கூடி, உயிரிழந்தவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி அமைதிப் பேரணி நடத்த முயன்றனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கூறி அவர்களை நாடாளுமன்ற வளாகத்தை அணுக போலீசார் அனுமதிக்கவில்லை.

போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் 355 பேர் கைது செய்யப்பட்டதாக கென்யா உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *