சிறுவன் மீது பாலியல் சீண்டல்! தன்முனைப்புப் பேச்சாளர் கைது!
- Thinagaren Sanggaren
- 17 Sep, 2025
செப்டம்பர் 17,
14 வயது சிறுவனின் உடல் பகுதியில் தகாத உறுப்புகளைத் தொட்டு பாலியல் சீண்டல் புரிந்த தன்முனைப்புப் பேச்சாளர் ஒருவர் தன் மீதானக் குற்றச்சாட்டை மறுத்து நீதிமன்ற விசாரணையைக் கோரினார். 44 வயதான Mohd Zulkarnain Atan எனும் அந்த தன்முனைப்புப் பேச்சாளர் கடந்த ஜூலை மாதம் PADANG BESAR-இல் உள்ள ஒரு பள்ளியில் 14 வயது சிறுவனிடம் அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று Sesyen நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
குற்றம்சாட்டப்பட்ட 44 வயது தன்முனைப்புப் பேச்சாளரின் கோரிக்கையை ஏற்ற Sesyen நீதிமன்றம் மேலதிக விசாரணையைத் தொடரும்படி உத்தரவிட்டதுடன் கட்டுப்பாட்டுடன் RM15,000 ஜாமீன் வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனைக் குற்றம்சாட்டப்பட்ட 44 வயது ஆடவர் நெருங்க கூடாது என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 16 மீண்டும் விசாரிக்கபடும் என Sesyen நீதிமன்ற நீதிபதி Ana Rozana Mohd Nor உத்தரவிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



