நான் தவறு செய்திருந்தால் என் மீது வழக்கு தொடருங்கள்! - மலாக்கா காவல்துறை தலைவர் சவால்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 17: நவம்பர் 24 அன்று டுரியான் துங்காலில் மாநில காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரின் கூட்டாளிக்கு குற்றப் பின்னணி இருப்பதாக தாம் கூறியதற்காக அதனை நிராகரிக்கும் தனது விமர்சகர்களை, தாராளமாக தம் மீது வழக்குத் தொடரலாம் என்று மலாக்கா காவல்துறைத் தலைவர் Dzulkhairi Mukhtar  சவால் விடுத்துள்ளார்.
உண்மைகள் மற்றும் தகவல்களின் ஆதரவு இல்லாமல் காவல்துறை ஊடக அறிக்கையை வெளியிடாது என்றும், அவர் தவறாக இருப்பதாகவோ அல்லது விசாரணையில் தலையிடுவதாகவோ உணர்ந்த எவரும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
நான் தவறு செய்ததாக நீங்கள் உணர்ந்தால், என் மீது வழக்குத் தொடருங்கள். சும்மா பேசாதீர்கள் என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஆடவர்களில் ஒருவர் தன் கணவர் என பெண் ஒருவர்  பொய் கூறியதாகவும், உண்மையில் அது அவரின் காதலி என்றும், அவர் மீது 10 வழக்குகள் இருப்பதாகவும் சூல்கைரி தெரிவித்ததை அடுத்து, சூல்கைரியின் கருத்துக்கள் அவமானகரமான மற்றும் வேண்டுமென்றே திசைதிருப்பல்  என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண் பல விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளித்திருந்தாலும், அவர் ஒருபோதும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும் சூல்கைரி தனது அறிக்கையில் உறுதியாக இருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *