எனக்கு கால்களே இல்லாததுபோல் உணர்கிறேன்! - மகாதீர்
- Shan Siva
- 15 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 15: மூன்று மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, தனது கால்களின் கட்டுப்பாட்டை இழந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்தை விவரித்த 100 வயதான அவர், தனது வழக்கமான காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வலது காலின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறினார். மேலும், தனக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், கடுமையான வலியால் அவதிப்படுவதாகவும் அவர் கூறினார்.
சில நாட்களுக்குப் பிறகு வலி குறைந்தது என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட 'பாட்காஸ்ட் டாக்டர் எம்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் கூறினார்.
ஆனால் இப்போது, மூன்று மாதங்களுக்குப் பிறகு, நான் குணமடைந்து நிற்க முடிகிறது... ஆனால் என்னால் இன்னும் என் கால்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்குக் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன் என்று கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து, மகாதீர் ஜனவரி 6 அன்று கண்காணிப்பிற்காக IJN-ல் அனுமதிக்கப்பட்டார். அவரது குணமடைதல் மற்றும் சிகிச்சை, பிசியோதெரபிக்கு அவர் காட்டிய நல்ல பலன் ஆகியவற்றில் மருத்துவர்கள் திருப்தி அடைந்ததால், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
அவரது வயதின் காரணமாக, அறுவை சிகிச்சைக்குப் பதிலாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



