சிலாங்கூர் நீர்வளம் 9 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும்
- Surendran Sumdraraj
- 08 Jul, 2026
சா ஆலாம், ஜூலை 8-
Monsun Barat Daya (MBD) மற்றும் September வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் El Nino நிகழ்வை எதிர்கொள்ள சிலாங்கூர் மாநிலத்தின் நீர்வளம் சுமார் ஒன்பது மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக Selangor Exco Kesihatan Awam dan Alam Sekitar, Jamaliah Jamaluddin தெரிவித்தார்.
MBD காலகட்டத்தில் வழக்கமாக மழைப்பொழிவு குறைவாக காணப்படும் நிலையில், El Nino நிகழ்வு மாநிலத்தின் நீர்வளத்துக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை மாநில அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
இதனால், மக்கள் நலன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நீர்வழங்கல் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக Lembaga Urus Air Selangor (LUAS) மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகள் மூலம் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டுள்ளது.
7 ஜூலை 2026 நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தின் ஏழு அணைக்கட்டுகளின் நீர்மட்ட திறன் நல்ல நிலையில் உள்ளது. அவை அனைத்தும் 75 விழுக்காட்டுக்கு மேல் பதிவாகியுள்ளன.
மொத்த அணை திறன் அடிப்படையில், தற்போதைய நீர்வளம் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தின் மொத்த நீர்வள நிலைமை ஒன்பது மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், வறண்ட காலநிலையால் ஏற்படும் சவால்களை சமாளிக்க மாநில அரசு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



