தேர்தலில் பெரிக்காத்தான் வெற்றி பெற்றால் உதவி நிதியாக மக்கள் ஆண்டுக்கு வெ.6,000 பெறுவர்!
- Muthu Kumar
- 14 Oct, 2025
கோலாலம்பூர், அக். 14 -
எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தால், மக்களுக்கு உதவி நிதியாக ஓராண்டுக்கு 6,000 வெள்ளி அல்லது மாதம் ஒன்றுக்கு 500 வெள்ளியை வழங்கும் என்று. எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் கூறியுள்ளார்.
அதோடு, எதிர்க்கட்சியின் தேசிய பரிவுமிக்க உதவி (பிபிஎன்) திட்டத்தின் கீழ், பல்லினத்தவர்களுக்கான பல்கலைக் கழகத்திற்கு முந்தைய இலவச கல்வியையும் பெரிக்காத்தான் வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அறிவிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில், இந்த பிபிஎன் திட்டத்தை அமல்படுத்த நாட்டின் நிதி நிலைமை அனுமதிக்கும் என்று பெரிக்காத்தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் இருந்தபோது, முதன் முறையாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.அதோடு, நாடு முழுமையிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளின் ஆற்றலை விரிவுபடுத்துவதற்காக அவற்றுக்கு கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஹம்ஸா கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



