GISB விவகாரம்: மில்லியன் கணக்கான சொத்துகள் - நிலங்கள் முடக்கம்! - தேசிய போலீஸ் படைத் தலைவர் அறிவிப்பு!
- Shan Siva
- 23 Sep, 2024
கோலாலம்பூர், செப் 23: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ்
ஹோல்டிங்ஸுடன் (ஜிஐஎஸ்பி) இணைக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள
நிலம், சொத்துக்கள் மற்றும்
வாகனங்களை போலீசார் முடக்கியுள்ளனர்.
இன்றுவரை கிட்டத்தட்ட 4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மொத்தம் 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய போலீஸ் படைத்
தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
மேலும், பணமோசடி தடுப்புப் பிரிவு 138 வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட RM882,795.94 பணத்தையும் கைப்பற்றியது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய
அவர்,
14 நிலங்களை அடையாளம் கண்டு முடக்கியுள்ளதாக் கூறினார்,
கைப்பற்றப்பட்ட மற்ற
சொத்துக்களில் ஒன்பது குதிரைகள், 14
முயல்கள் மற்றும் மூன்று மயில்கள், RM18,650 ரொக்கம் மற்றும் RM600 மதிப்புள்ள
இரண்டு கைக்கடிகாரங்களும் இருப்பதாக அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *