சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியின் 'வாடிவாசல்' படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்!
- Muthu Kumar
- 05 Mar, 2026
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல ஹீரோக்களின் கனவாகும்.இருந்தாலும் இந்த ஆசை ஒரு சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. விடுதலை படத்தின் பணிகள் முடிவடைந்த பிறகு சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படத்தின் பணிகள் தான் தொடங்கும் என்று கூறப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
எனினும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, இதனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. இத்திரைப்படம் பல காரணங்களால் தாமதமானதை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி, சூர்யாவுடன் அடுத்த படம் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அப்போது வெளியானது.
இந்நிலையில் தற்போது வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா முனைப்பு காட்டி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக வெற்றிமாறன் மொத்தம் 130 நாள் கால்ஷீட் சூர்யாவிடம் கேட்டிருப்பதாகவும், ஆனால், தொடர்ந்து தேதிகள் கொடுக்காமல், மாதத்திற்கு 10 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், சூர்யா தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்குவது பற்றிய அப்டேட் கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா கருப்பு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து படம் விரைவில் வெளியாக உள்ளது.
கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், இந்த திரைப்படத்திற்கு டைட்டில் விஸ்வநாத் & சன்ஸ் என வைக்கப்பட்டுள்ளது. அதனுடன், இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், இதனுடன் வெளியானது. நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அதனுடன் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் வரும் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



