மலேசியாவில் இ-விளையாட்டை உயர்கல்வி கூடங்களில் பாடமாக அறிமுகப்படுத்த முயற்சி - ஹன்னா இயோ!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்.ஆக. 21-

மலேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சு, இ-விளையாட்டை உயர்கல்வி நிறுவனங்களில் நீண்டகால பாடமாக அறிமுகப்படுத்துவது குறித்து உயர்கல்வி அமைச்சுடன் விவாதிக்க உள்ளதாக அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

அவர் கூறுகையில். தற்போது தேசிய விளையாட்டு சங்கம், தேசிய இளைஞர், விளையாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் இ-விளையாட்டு திறன்களை வளர்க்கும் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி, இ-விளையாட்டை ஒரு தொழில்முறை வாழ்க்கையாக மாற்றுவதற்கு அடித்தளமாக அமைகிறது.

சமீபத்தில், சிலாங்கூர் அணி. மொபைல் லெஜெண்ட்ஸ்: பேங் பேங் போட்டியில் மாபெரும் வெற்றியைப் பெற்று பெரும் பரிசுத் தொகையை வென்றது. இந்த வெற்றி. இ-விளையாட்டை ஒரு தொழிலாக பலரும் பார்க்கத் தொடங்குவதற்கு உந்துதலாக அமைந்துள்ளது. இதனால், இளைஞர்களிடையே இ-விளையாட்டு மீதான ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஹன்னா இயோ மேலும் கூறுகையில், இ-விளையாட்டு துறையில் திறமைகளை வளர்க்க நீண்டகால கல்வி, பயிற்சி
அவசியம். உயர்கல்வி நிறுவனங்களில் இ-விளையாட்டு ஒரு முறையான பாடமாக அறிமுகப்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் தொழில்முறை வீரர்களாகவோ அல்லது தொடர்புடைய துறைகளில் நிபுணர்களாகவோ உருவாக முடியும்.

இந்த முயற்சி, மலேசியாவில் இ-விளையாட்டு துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இ-விளையாட்டு துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தத் திட்டம் மலேசிய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அரசு, தனியார் துறைகளின் ஒத்துழைப்பு இதற்கு முக்கியமானது என ஹன்னா இயோ வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *