ஆப்கான் அதிகாரிகள் வரவேற்பு- குவான் எங்கை பெரிக்காத்தான் கடுமையாகச் சாடியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 22-

தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை கல்வி அமைச்சு அண்மையில் வரவேற்று உபசரித்து அனுப்பி இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கை, பெரிக்காத்தான் நேஷனல் கடுமையாகச் சாடியுள்ளது.

குவான் எங்கின் அறிக்கை நாட்டிற்குற்கு மோசமான தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக வருணித்த, குபாங் கிரியான் நாடாளுமன்ற உறுப்பினர் துவான் இப்ராஹிம் துவான் மான், இந்த விவகாரத்தில் தமது ஆதரவை அவர் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கு வழங்கியும் இருக்கின்றார்.நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம், புதிதாக சுதந்திரம் அடைந்திருக்கும் ஒரு நாட்டிற்கான மத்திய அரசாங்கத்தின் அத்தகைய நடவடிக்கை, உதவிகளை வழங்குவதற்கு சமமானதாகும் என்றும் துவான் இப்ராஹிம் கூறியுள்ளார்.

"கல்வி கற்க ஆப்கானிஸ்தானிய மாணவர்களுக்கு இடமளிப்பதைத் தவிர்த்து, நாம் முன்னோக்கிச் செல்கின்றோம் என்பதை எடுத்துரைக்கும் கல்வித் துறையில், ஆப்கானிஸ்தானுடன் ஒத்துழைக்கும் கல்வி அமைச்சரின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம்” என்று நேற்று வியாழக்கிழமை நடந்த ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்படுவதுபோல், தற்போதை ஆப்கானிஸ்தானிய ஆட்சி தலிபானிய அரசாங்கமல்ல என்றும் அந்நாடு பல நாடுகளுடன் அரசதந்திர உறவுகளைக் கொண்டிருக்கிறது என்றும், பாஸ் கட்சி துணைத் தலைவருமான துவான் இப்ராஹிம் கூறினார்.தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானிய கல்வி அமைச்சின் அதிகாரிகளை, கல்வி அமைச்சு கோலாலம்பூரில் இம்மாதத் துவக்கத்தில் வரவேற்று உபசரித்து அனுப்பி வைத்திருந்தது தொடர்பில்,ஃபட்லினாவிடமிருந்து ஜசெக தலைவருமான குவான் எங் நேற்றுமுன்தினம் புதன்கிழமை விளக்கம் கோரியிருந்தார்.

இடைநிலைப் பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் மேற்கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்திருப்பதுடன், மலேசியாவுடன் அரசதந்திர உறவுகளைக் கொண்டிருக்காத ஒரு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளின் வருகைக்கு கல்வி அமைச்சு ஏன் அனுமதி அளித்தது என்றும் குவான் எங் கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு, தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் பெண்களுக்கான கல்வி மீது சர்ச்சைக்குரிய கொள்கைகளை அமல்படுத்தி இருப்பதால், அவர்களின் வருகை கவலையளிக்கும் வகையில் இருக்கிறது என்றும், பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான குவான் எங் குறிப்பிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானிய கல்வி அமைச்சின் அதிகாரிகள் மலேசியா வந்திருந்ததை ஃபட்லினா இம்மாதம் 16ஆம் தேதி உறுதிப்படுத்தி இருந்தார்.சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி உட்பட மலேசியாவின் கல்வி முறை குறித்து அவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் ஃபட்லினா கூறியிருந்தார்."ஆப்கானிஸ்தானுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்ய மலேசியா தயாராக இருக்கிறது என்று, கடந்த ஆண்டில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டிருந்த அறிக்கையின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானுக்கு உதவ கல்வி அமைச்சு ஈடுபட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

பெண்களுக்கு எதிராக தாலிபான் நிர்வாகம் தடைகளை விதித்திருக்கிறது. அத்தகைய தடைகளை ஐநா 'பாலின நிறவேறி' என்று வருணித்திருக்கிறது.பெண் பிள்ளைகள் இடைநிலைப் பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கல்வி கற்க ஆப்கானிஸ்தான் அனுமதிக்கவில்லை.ஆப்கானிஸ்தான் மட்டும்தான், உலகில் இத்தகைய தடைகளை விதித்திருக்கும் ஒரே நாடாகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *