மலேசிய கால்பந்து வாரிசு வீரர்கள் ஆவண மோசடி: பிபா குற்றவியல் நடவடிக்கைக்குப் பரிந்துரை
- Tamil Malar (Reporter)
- 18 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 18-
மலேசியாவின் ஹரிமாவ் மலாயா அணியில் இடம்பெற்ற ஏழு வாரிசு வீரர்கள் தொடர்பான ஆவண மோசடி விவகாரத்தில், உலக கால்பந்து கூட்டமைப்பான பிபா, இது குற்றவியல் குற்றமாகக் கருதி, சம்பந்தப்பட்ட நாடுகளின் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
64 பக்கங்கள் கொண்ட முழு எழுத்து முடிவு அறிக்கையை இன்று அதிகாலையில் பிபாவின் மேல்முறையீட்டுக் குழு வெளியிட்டது. அதில், பிரேசில், அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய ஐந்து நாடுகளின் குற்றவியல் அதிகாரிகளுக்கு இவ்விவகாரத்தை உடனடியாகத் தெரிவிக்குமாறு பிபா செயலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஆவணங்களை மோசடியாகத் திருத்தியது மிகவும் தீவிரமான குற்றம். இது அந்தந்த நாடுகளில் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. எனவே, உரிய குற்றவியல் விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிபா தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



