போலி ஆவணங்களைப் பயன்படுத்திய 7 கால்பந்து விளையாட்டாளர்கள் இடைநீக்கம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 28,

மலேசிய கால்பந்து அணியின் முக்கிய விளையாட்டாளர்கள் போலியான ஆவணங்களை வழங்கியிருப்பதாக FIFA கால்பந்து அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் சம்மந்தப்பட்ட 7 கால்பந்து விளையாட்டாளர்களையும் இடைநீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலகக் கால்பந்து ஆணையமான FIFA, மலேசியக் கால்பந்து ஆணையம் சம்மந்தப்பட்ட 7 விளையாட்டாளர்களின் போலி ஆவணங்களை மதிப்பீடு செய்ய தவறியதாகக் குற்றம்சாட்டியது. 

Gabriel Felipe Arrocha, Facundo Tomás Garcés, Rodrigo Julián Holgado, Imanol Javier Machuca, João Vitor Brandão Figueiredo, Jon Irazábal Iraurgui, Hector Alejandro Hevel ஆகிய 7 கால்பந்து விளையாட்டாளர்களும் வெளிநாட்டினர் என்றாலும் மலேசியக் குடியுரிமைப் பெற்று மலேசிய அணிக்காக அனைத்துலகக் காலபந்து போட்டிகளில் விளையாடி வருகின்ற நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய கால்பந்து போட்டிகளிலும் மலேசியாவுக்காக விளையாடவுள்ள நிலையில் FIFA அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. சம்மந்தப்பட்ட 7 கால்பந்து விளையாட்டாளர்களும் RM1.9 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் 12 மாதங்கள் இடைநீக்கத்துடன் தாலா RM 11,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *