மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக பிபா ஒழுங்கு நடவடிக்கை

top-news

கோலாலம்பூர், செப். 27-

செய்தி-வெற்றி மைந்தன்

மலேசிய கால்பந்து சங்கம், ஏழு தேசிய அணி வீரர்கள் மீது அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு முறை குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் பிபா ஒழுங்கு முறைக் கோவையின் பிரிவு 22-ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த மீறல், ஆவணங்களைப் புனைந்து தவறாகப் பயன்படுத்தியது தொடர்பானதாகும்.

பிபா வெளியிட்ட அறிக்கையில், எப்ஏஎம், வீரர்களின் தகுதியை உறுதிப்படுத்துவதற்காகப் புனையப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள், வீரர்கள் அதிகாரப்பூர்வ போட்டிகளில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவம், கடந்த ஜூன் 10 அன்று வியட்நாமுக்கு எதிராக நடைபெற்ற 2027 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியுடன் தொடர்புடையது. இந்தப் போட்டியில், சில வீரர்களின் தகுதி குறித்து பிபாவிடம் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஏழு வீரர்கள், கேப்ரியல் பெலிப் அரோச்சா, பகுண்டோ தோமஸ் கார்சஸ், ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்காடோ, இமானோல் ஜாவியர் மச்சுக்கா, ஜோவோ விக்டர் பிராண்டாவ் பிகியூரேடோ, ஜான் இராசபால் இராவ்ர்கி, ஹெக்டர் அலெஜான்ட்ரோ ஹெவல் செரானோ ஆகியோராவர். இவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட வியட்நாம் போட்டியில் விளையாடியவர்கள்.

பிபாவின் இந்த நடவடிக்கை, மலேசிய கால்பந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *