ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்களின் தடை உடனடி ரத்து: FIFA

top-news

கோலாலம்பூர், ஜன. 27-

 மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவைச் சேர்ந்த ஏழு வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 மாத தடை உத்தரவு, உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த முடிவு, விளையாட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றமான விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றம் (Court of Arbitration for Sport – CAS) வழங்கிய தீர்ப்பை FIFA ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. CAS, சம்பந்தப்பட்ட ஏழு வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த முக்கிய முன்னேற்றத்தை மலேசிய கால்பந்து சங்கம் (FAM) இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் அறிவித்தது. அதனுடன், FIFA அனுப்பிய கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதம், FIFA-வின் ஒழுக்கக் குழுத் தலைவர் அமெரிக்கோ எஸ்பல்லார்காஸ் (Americo Espallargas) அவர்களால் கையொப்பமிடப்பட்டதாக FAM தெரிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம், ஏழு வீரர்களும் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக அனுமதி பெற்றுள்ளனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *