கால்பந்தாட்டத்தின் போதே உயிரிழந்த பிரபலக் கால்பந்து வீரர்! - Firos Mohamed

top-news

ஜூலை 6,


நேற்று Manjung தேசிய மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் போது பினாங்கு அணியில் கோல்காவலர் Firos Mohamed மயங்கி விழந்த நிலையில் முதலுதவி பயனின்றி உயிரிழந்தார். உயர்கல்வி அமைச்சர் Dr Zambry Abd Kadir தலைமையில் நடைபெற்ற இந்த கால்பந்தாட்டத்தில் கெடாவுக்கு எதிராக ஆட்டத்தின் போது Firos Mohamed மயங்கி விழுந்ததாக நம்பப்படுகிறது. உடனடியாக மைதானத்தின் மருத்துவக் குழு அவரை மஞ்சோங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 

53 வயதான Firos Mohamed பினாங்கு மாநிலக் கால்பந்தாட்டக்காரர்களில் முக்கியமானவர் என்றும் முன்னதாக பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களின் முதன்மை கோல்காவலராகவும் விளையாடியுள்ளார். Firos Mohamed ஆட்டத்தின் போது இயல்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்ததாக சக கால்பந்தாட்ட வீரர்கள் தெரிவித்துள்ளது. விளையாட்டின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். Firos Mohamed 1990 முதல் 1998 ஆம் ஆண்டு வரையில் தேசிய Harimau Kumbang அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Penjaga gol terkenal Pulau Pinang, Firos Mohamed, 53, rebah semasa perlawanan bola sepak di Stadium Manjung dan disahkan meninggal dunia akibat sakit jantung. Firos pernah mewakili Pulau Pinang, Selangor dan Harimau Kumbang dari 1990 hingga 1998.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *