இஸ்ரேல் கடல்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்! – இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு!
- Thinagaren Sanggaren
- 02 Oct, 2025
அக்தோபர் 2,
இன்று அதிகாலை இஸ்ரேல் கடல்பகுதியில் நுழைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு விளக்கமளித்துள்ளது. மலேசிய நேரப்படி இன்று நண்பகல் 3.30 மணிக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் கடல்பகுதியில் முன் அறிவிப்பில்லாமல் நுழைந்த 47 படகுகளை இஸ்ரேல் கடல்படை பறிமுதல் செய்திருப்பதாகவும் கட்டம் கட்டமாக அவர்கள் துறைமுகத்திற்கு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டுடன் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 படகுகளில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேல் துறைமுகத்திற்கு வந்தது மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 4 கப்பல்கள் நடுக்கடலில் பழுதடைந்திருப்பதால் இஸ்ரேலின் ராணுவக் கப்பலின் உதவியுடன் இழுத்து வருவதாகவும் இன்னும் எந்தவொரு படகும் துறை முகத்திற்கு வந்தடையவில்லை என்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடல்படையினர் கட்டுப்பாட்டில் மலேசியாவைச் சேர்ந்த 27 பேரும் உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



