நான் மட்டும் DAP உடன் ஒத்துப்போயிருந்தால் MP ஆகியிருப்பேன்! - அக்மால் சலே
- Shan Siva
- 17 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 17: அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சலே, தான் சுயநலவாதியாகவும், தனது சொந்த அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பவரகவும் இருந்தால், டிஏபியுடன் ஒன்றாக அமர்ந்து வேலை செய்யலாம். ஆனால், மலாய்-முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பதே தனது கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்,
தான் மற்ற அரசியல்வாதிகளின் ஏஜண்ட் அல்ல, மலாய் ஒற்றுமைக்கான ஏஜண்ட் மட்டுமே என்றும் கூறினார். தான் ஒரு பெரிகாத்தான் தேசிய ஏஜெண்ட் என்ற விமர்சகர்களின் கூற்றுகளையும் அவர் நிராகரித்தார், மலாய்-முஸ்லிம் ஒற்றுமைக்கான தனது வாதத்தில் பாஸ் கட்சியும் அடங்கும் என்று கூறினார்.
ஜாசின் அம்னோ பிரிவுத் தலைவரான அக்மால், டிஏபியுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், பாஸ் கட்சியின் சூல்கிஃப்லி இஸ்மாயில் தற்போது வகிக்கும் ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியை வெல்ல முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
ஆனால் இது என்னைப் பற்றியது அல்ல - இது என்னை விட பெரிய ஒன்று என்று அவர் மலேசியா கெஜட்டிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மலாய்-முஸ்லிம் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. நான் வெறும் வார்த்தை அலங்காரத்திற்காக பேசுவதாக மக்கள் கூறலாம்.. ஆனால் முதல் நாள் முதல், இன்று வரை இதில் நான் உறுதியாக இருந்து வருகிறேன் என்று அக்மால் தெரிவித்தார்.
மலாய்-முஸ்லிம் ஒற்றுமையின் பார்வை அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்துவுக்கு மட்டுமே உள்ளதா என்று கேட்டபோது, அது இந்த மூன்று கட்சிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று அக்மால் கூறினார்.
பிகேஆரில் ஒரே மாதிரியான போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டு, எங்கள் லட்சியத்தில் நம்பிக்கை கொண்ட மலாய்க்காரர்கள் இருந்தால், அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



