வெனிசுலா நிலநடுக்கத்தில் மனைவி, இரு குழந்தைகளை இழந்த கால்பந்து வீரர்

top-news
FREE WEBSITE AD

கராகஸ், ஜூன் 29 –

வெனிசுலாவை உலுக்கிய பேரழிவு நிலநடுக்கத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஹோவின் துயரம் உலகக் கால்பந்து இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெனிசுலா லீக் அணியான மரிடிமோ டி லா குவைரா அணிக்காக விளையாடி வரும் லூகாஸ் ட்ரெஹோ, போட்டிக்காக கராகஸில் இருந்தபோது, அவரது மனைவி யானினா மற்றும் குழந்தைகளான ஆரோன், ஐனோவா ஆகியோர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு இரட்டை நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தது.

நிலநடுக்கத்துக்குப் பிறகு 74 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக் குழுவினருடன் இணைந்து தனது குடும்பத்தினரை உயிருடன் தேடி அலைந்த ட்ரெஹோவுக்கு, இறுதியில் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. இந்த துயரச் செய்தியை அவரது சக வீரர்களும், கிளப்பும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தின.

இதையடுத்து, மரிடிமோ டி லா குவைரா கிளப் இரங்கல் செய்தி வெளியிட்டு, ட்ரெஹோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. கால்பந்து உலகின் பல்வேறு வீரர்கள், ரசிகர்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகளும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *