மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான AI – சுகாதார அமைச்சு தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 20: பொது மருத்துவமனைகளில் குறிப்பாக புற்றுநோயைக் கண்டறிவதில், நோயைக் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இணைக்க சுகாதார அமைச்சகம் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிஃப்ளி அஹ்மட்நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுகாதார அமைப்பில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பு தொழில்நுட்பம் பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் செலவு குறைந்ததாக நிரூபிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதில் AI தொழில்நுட்பம் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது, குறிப்பாக புற்றுநோய் போன்ற நோய்களை முன்கூட்டியே கண்டறிதலில் முக்கிய பங்காற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், AI நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பாக ஒருங்கிணைக்கப்படுவதையும் உறுதிப்படுத்த அதன் பலன்கள் மற்றும் சாத்தியக்கூறுகளை முழுமையாக மதிப்பிட வேண்டும்

என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *