மறந்து விட்டேன், நேரமில்லை லைசென்ஸ் இல்லாத வாகனமோட்டிகள் கூறும் வழக்கமான காரணங்கள்!
- Muthu Kumar
- 08 Aug, 2025
ஷா ஆலம். ஆக. 8-
ஷா ஆலமில் உள்ள நெடுஞ்சாலையில் (கெசாஸ்) நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையின் போது வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாத காரணத்தினால் பிடிபட்ட பெரும்பாலான வாகனமோட்டிகள் 'நேரமில்லை' அல்லது 'மறந்து விட்டேன்' என்ற காரணங்களைக் கூறியுள்ளனர்.
நேற்றிரவு 8.30 மணி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இந்த ஐந்து மணி நேர சோதனை நடவடிக்கையில் மொத்தம் 580 வாகனங்கள் சோதனையிடப்பட்டு 252 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.
வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாதது தொடர்பில் 76 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் லைசென்ஸ் காலாவதியானது (51), காப்புறுதி இல்லாதது (49) ஜி.டி.எல். லைசென்ஸ் இல்லாதது (8), பிரதிபலிப்பு கண்ணாடி இல்லாதது (S) தொழில்நுட்ப தவறுகள் (10) ஆகிய குற்றங்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது அதிக பட்சம் ஈராண்டுகள் வரை வாகனமோட்டும் லைசென்ஸ் புதுப்பிக்காதவர்களை அடையாளம் கண்டோம். அவர்களில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிளோட்டிகளாவர் என்று இச்சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்ளிடம் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



