ஜிஆர்எஸிலிருந்து ஸ்டார் வெளியேறினால் கட்சி இரண்டாக உடைந்து விடும்- ஆய்வாளர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 3-

சபா மாநில ஆளும் காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியிலிருந்து ஸ்டார் கட்சியை வெளியேற்றும் ஜெஃப்ரி கிட்டிங்ஙானின் நடவடிக்கையினால், அக்கட்சி இரண்டாக உடைந்து விடும் என்று. அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.ஸ்டார் கட்சி தொடர்ந்து ஆளும் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் தலைவர்களும் விரும்புவதைக் காண முடிகிறது.

இன்னும் சுமார் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படுவதென்று ஜிஆர்எஸ் முடிவு செய்திருந்தாலும், ஸ்டார் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்போது ஜிஆர்எஸி லிருந்து ஸ்டார் வெளியேறினால், அக்கட்சி இரண்டாக உடைந்து விடும். ஜிஆர்எஸ் கூட்டணியின் கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டார் ஆதரவாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் "நேரடி உறுப்பினர்கள்" என்ற அந்தஸ்தில் தொடர்ந்து ஜிஆர்எஸ்ஸில் இருப்பார்கள் என்பது இதற்கு காரணமாகும்.

"அத்தகைய சிறப்பு உறுப்பியத்துவத்திற்கு
ஜிஆர்எஸ் அனுமதி அளித்திருப்பதை நம்மால் மறந்துவிட முடியாது என்று, சபா மலேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லி குவோக் தியுங் எஃப்எம்டியிடம் தெரிவித்துள்ளார்.
லீயின் கருத்தை ஆமோதித்திருக்கும் மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அவாங் அஸ்மான், ஜிஆர்எஸ்ஸை விட்டு வெளியேறு வதற்கு, ஸ்டார் கட்சியின் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவை கிட்டிங்ஙான் பெறுவாரா என்பதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

"இது, அந்த ஆறு ஸ்டார் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் இணக்கம், அரசியல்
நெருக்கடி அல்லது ஜிஆர் எஸ் அல்லது பக்காத்தான் ஹராப்பானினால் வழங்கப்படக் கூடிய வாய்ப்புகளை பொறுத்துள்ளது" என்று அவாங் குறிப்பிட்டுள்ளார்.சபா சட்டமன்றத் தேர்தலில் ஸ்டார் கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது புதிய தோழமைக் கட்சியைத் தேடுமா என்பது குறித்து லீ கேள்வி எழுப்பியுள்ளார்.

"இதுநாள் வரையில் ஆர்எஸ்ஸுடன் சேர்ந்து பணியாற்றுவதில் ஸ்டார் கட்சியினருக்கு வசதியாக இருந்து வருகிறது. ஆதலால், இறுதிக் கட்டத்தில் திடீரென்று ஜிஆர்எஸ்ஸிலிருந்து வெளியேற ஸ்டார் ஏன் விரும்புகிறது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணி சேர்வதை ஜிஆர்எஸ் தொடருமேயானால், அக்கூட்டணியிலிருந்து ஸ்டார் வெளியேறிவிடும் என்று, கிட்டிங்ஙான் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *