உண்மையை ம.இ.கா. ஏற்றுக் கொள்ளாவிட்டால் கட்சி பின்தங்கிவிடும்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, ஆக. 17-

மலேசிய அரசியல் மாறிவிட்டது. தற்போது ஒரு பெரும் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. “இந்த உண்மையை ம.இ.கா. ஏற்றுக் கொள்ளாவிட்டால் கட்சி பின்தங்கிவிடும் என்று அக்கட்சியின் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.

பலர் ம.இ.கா. பலவீனமாக உள்ளது என்கிறார்கள். ஆனால், அவர்கள் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.அவர்கள் பேசுவது
எப்போதும் ம.இ.கா. வைப் பற்றித்தான். பல்வேறு விமர்சகர்கள் தங்களை பகுப்பாய்வாளர்கள் எனக் கூறிக் கொண்டு கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் எங்களுக்கு முக்கியம் விமர்சகர்கள் அல்ல, எங்கள் அடிப்படை உறுப்பினர்கள் இந்திய சமுதாயத்தினரே.உறுப்பினர்கள் சொல்வதே எங்கள் வலிமை. அவர்களின் நம்பிக்கையில்தான் ம.இ.கா.
நிலைத்திருக்கிறது என்று நேற்று ஜொகூர் மாநில ம.இ.கா.வின் 79 ஆவது ஆண்டுப் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசினார்.

அதன் பின்னர் மாநாடு முடிந்து, செய்தியாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன்,கெடா, பினாங்கு ஆகிய இடங்களில் கட்சியின் முன்னேற்றம் திசையைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கின்றன.நாங்களும் திறந்த மனதுடன் விவாதிக்கிறோம்.எதையும் மறைக்கவில்லை. இது ரகசிய ஒப்பந்தம் அல்ல. எங்கள் கட்சியின் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம், வேறு யாரும் அல்ல. நாங்கள் யாரிடமும் கோபம் கொள்ளவில்லை.

அவர்கள் சந்திக்கும் அழுத்தங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதேபோல் நாங்கள் சந்திக்கும் அழுத்தங்களையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள், "எனத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *