இது நடந்தா திமுக கூட்டணியில இருக்க மாட்டோம் - திருமாவளவன்!
- Muthu Kumar
- 08 Feb, 2026
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மிகத் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.'பாஜக மற்றும் பாமக கட்சிகள் இடம்பெறும் எந்த அணியிலும் விசிக் இணையாது. திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், நாங்கள் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் இது குறித்து விரிவாகப் பேசுகையில், 'பாஜக மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்புகிறது. பாமக ஜாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தலித் சமூகத்திற்கு எதிராக பரப்புகிறது. சோசியல் இன்ஜினியரிங் என்ற பெயரில் சமூகங்களிடையே வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கும் இந்த இரு கட்சிகளுடனும் எந்தக் காலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்' என்று வலியுறுத்தினார்.
மேலும், 'இந்த நிலைப்பாடு இன்று நேற்று எடுக்கப்பட்டது அல்ல. நீண்ட காலமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். தேர்தலுக்காக நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். நமது கருத்தியல் பயணத்தில் நம்பகத்தன்மையை வளர்த்தெடுப்பது மிக முக்கியம். அதை ஒருபோதும் இழக்கக் கூடாது' என்று அவர் தெளிவுபடுத்தினார்.
திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருக்கும் விசிக, தற்போது பாஜக-பாமக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'திமுக ஒரு முடிவெடுத்தால் அது எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தால், நாங்கள் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. இதில் எந்த சமரசமும் இல்லை' என்று திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக-பாமக கூட்டணி வலுப்பெறும் சூழலில், விசிக தனது தலித் மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் நிலையில், விசிக-திமுக உறவில் இந்த நிலைப்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவனின் இந்த தெளிவான பேச்சு, கட்சியின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்று கட்சியினர் நம்புகின்றனர்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் மிகத் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். 'பாஜக மற்றும் பாமக கட்சிகள் இடம்பெறும் எந்த அணியிலும் விசிக இணையாது. திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், நாங்கள் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



