பி.கே.ஆர் கட்சியிலிருந்து 28 உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்!

top-news

மே 11,

பி.கே.ஆர் கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டே மற்ற அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருந்த 28 உறுப்பினர்களைப் பி.கே.ஆர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருப்பதாகப் பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளர் Fuziah Salleh இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முந்தைய கட்சிகளிலுருந்து அதிகாரப்பூர்வமாக விலகியதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பி.கே.ஆர் கட்சியில் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டதாகவும் ஆனால் பழைய கட்சியிலும் அவர்கள் உறுப்பினர்களாக இருந்து சலுகைகளையும் பெற்று வந்தது உறுதிச் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக Fuziah Salleh விளக்கமளித்தார். 

இது தொடர்பாக 36 உறுப்பினர்கள் மீது புகார்கள் கிடைக்க பெற்ற நிலையில் அதில் 11 பேர் தங்களின் பழைய கட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை என நிரூபித்ததை அடுத்து 28 உறுப்பினர்கள் இரட்டை கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்தது தெரிய வந்துள்ளதாக Fuziah Salleh தெரிவித்தார். சம்மந்தப்பட்ட 28 பேரால் கட்சியின் தேர்தலுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை என்றும் சம்மந்தப்பட்ட 3 தொகுதிகளிலும் முறையாகத் தொகுதித் தலைவர் தேர்தல் நடைபெற்றதாகவும் Fuziah Salleh தெரிவித்தார்.

PKR memecat 28 ahli termasuk tiga pemimpin Cabang kerana didapati memiliki keahlian dalam parti lain. Menurut Fuziah Salleh, 11 daripada 36 individu yang dikenal pasti berjaya merayu dan diterima semula selepas mengemukakan bukti komitmen kepada parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *