இதையே நிர்வகிக்க முடியவில்லை... பிறகு எப்படி நாட்டை ஆள முடியும்?! - புவாட் சர்காஷி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 27: பெர்லிஸ் மாநில முதல்வர் பதவியைச் சுற்றி உருவான அரசியல் குழப்பத்தின் பின்னணியில் ஊழல் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி வலியுறுத்தியுள்ளார்.

PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டிய புவாட், பெர்லிஸில் நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுத்தப்படுவதாகவும், அவற்றின் பின்னணியில் ஊழல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

MACC இன்னும் ஏன் காத்திருக்கிறது? உடனே விசாரணை தொடங்க வேண்டும்.
இது ஒரு சிறிய மாநிலம், வளங்களும் குறைவு. இதையே நீங்கள் நிர்வகிக்க முடியாவிட்டால், நாட்டை எப்படி ஆள முடியும்? என புவாட் தனது ஃபேஸ்புக் பதிவில் விமர்சித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *