முஹிடின் மீது நம்பிக்கை இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியேறுங்கள்-சைஃபுடினுக்கு ஹரிஸ் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 28-

கட்சித் தலைவர் முஹிடின் யாசின் மீது வெளிப்படையாக தாக்குதல் தொடுத்திருக்கும் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் சைஃபுடின் அப்துல்லாவின் "கட்சிக்கு சேதத்தை விளைவிக்கும் தீய நோக்கம்" வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.இதன் காரணத்தினால், சைஃபுடினுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

கட்சித் தலைவர் மீதான நம்பிக்கையை சைஃபுடின் இழந்து விட்டிருப்பாரேயானால் அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று.அதன் தகவல் பிரிவுத் தலைவர் ஹரிஸ் இடாஹாம் ரஷிட் தெரிவித்தார்."இதுபோன்ற ஒரு வெளிப்படையான தாக்குதல், அதன் பின்னணியின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

"ஆதலால், புகார்கள். விசாரணைகள் மற்றும் நீண்ட விசாரணைக்காக காத்திருக்காமல் தனது ஒழுங்கு வாரியத்தின் மூலம் சைஃபுடினுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, பெர்சத்து இளைஞர் பிரிவு வலியுறுத்துகிறது என்று. நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஹரிஸ் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முஹிடின் "தமது தலைமைத்துவ தரத்தை இழந்து விட்டார்” மற்றும் ஒரு காலத்தில் போற்றப்பட்ட அதே தலைவர்போல் இப்போது அவர் இல்லை என்று பெரித்தா ஹரியானிடம் முன்னதாகக் கூறிய சைஃபுடின், பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து முஹிடின் விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.

கட்சிக் கூட்டங்களை நடத்தவும் முஹிடின் தவறி விட்டார் என்றும் குற்றஞ்சாட்டிய இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான சைஃபுடின், கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலியும் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசால் இஸ்மாயிலும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.சைஃபுடினின் கருத்துகள், தனது சொந்த நலன்களுக்காகவோ அல்லது சிலரின் நலன்களுக்காகவோ கட்சியைக் குறைத்து மதிப்பிடும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும் என்று ஹரிஸ் கூறினார்.

கட்சியைக் காட்டிலும் எந்த ஒரு தனிநபரும் முக்கியமானவர் அல்ல என்பதை கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பெர்சத்து இளைஞர் பிரிவு நினைவுறுத்த விரும்புவதாகவும் கட்சியின் கட்டொழுங்கை அனைவரும் நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *