சமய ஒன்றுக்கூடலில் கலவரம்! 10 பேர் கைது! – ஜொகூர் காவல்துறை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 21, 

பொதுவெளியில் கலவரம் ஏற்பட்டதாக வெளியான காணொலியில் சம்மந்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 உள்ளூர்வாசிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதாகச் செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் Ng Swie Chat தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவிய நிலையில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் செகாமாட்டில் உள்ள Padang Awam Li Chi திடலில் நிகழ்ந்ததாக செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் Ng Swie Chat தெரிவித்தார்.

பெளத்த மதத்தினரின் ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இரு குழுவினருக்கும் இடையில் கலவரம் மூண்டதாகவும் கலவரத்தில் ஈடுபட்ட 14 முதல் 56 வயதுடைய 10 மலேசியர்களைக் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் Ng Swie Chat தெரிவித்தார். கைது செய்யப்பட்ட்ட 10 பேரும் தனிநபர் முன்விரோதம் காரணமாகக் கலவரத்தில் ஈடுப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில் அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாக செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் Ng Swie Chat தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *