அரசு திட்டங்களில் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட கூடாது! டி.ஏ.பி கணபதி ராவ் வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 16,

பக்காத்தான் தலைமையிலான அரசாங்கத்திற்குப் பேரதரவு அளித்து வந்த இந்தியர்களையும் சீனர்களையும் பக்காத்தான் அரசு இழக்க கூடாது என டி.ஏ.பியின் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் Ganabatirau கேட்டுக்கொண்டார். இந்தியர்கள் சீனர்கள் தொடர்பான சிக்கல்களை அரசு விரைந்து கவனிக்க வேண்டும், குறிப்பாகத் தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி விவகாரங்கள் இந்தியர்களும் சீனர்களும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருந்தால் அது தேர்தலின் போது பக்காத்தானுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என Ganabatirau தெரிவித்தார்.  பக்காத்தான் அரசு மீண்டும் இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற கோயில்கள் தொடர்பான சிக்கல்களுக்கு மேலும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அரசு திட்டங்களில் இந்தியர்களும் சீனர்களும் விடுப்பட்டு விட கூடாது என்பதில் அரசாங்கம் மேலும் முனைப்புடன் இருக்க வேண்டும் என்றும் Ganabatirau கேட்டுக்கொண்டார். Reformasi என்பது வெளிப்படைத்தன்மையான அரசு செயல் திட்டங்களால் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது என டி.ஏ.பியின் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் Ganabatirau பக்காத்தானுக்கு நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *