பள்ளி வகுப்பறையில் கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட 4 மாணவர்களுக்கு ஜாமின்! - BALING

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 23,

பாலிங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட 4 மாணவர்களுக்குத் தலா 3000 ரிங்கிட் ஜாமின் வழங்கி மேல்விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி பாலிங் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அக்தோபர் 12இல் பாலிங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி மாணவியைப் பலமுறை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 15 முதல் 17 வயதுடைய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 

பாதிக்கப்பட்ட மாணவியின் கூட்டுப் பாலியல் காணொலி கைப்பேசியில் இருப்பதைக் கண்ட மாணவயின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 மாணவர்களும் கடந்த மே மாதம் முதல் பலமுறை வகுப்பறையில் பள்ளி வளாகங்களிலும் கூட்டுப் பாலியலில் ஈடுபட்டதாகவும் அவர்களில் ஒரு மாணவன் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களுக்கும் தலா 3000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அடுத்த விசாரணை நவம்பர் 27 மேற்கொள்ளப்படும் என பாலிங் Sesyen நீதிமன்ற நீதிபதி Rohaida Ishak உத்தரவிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *