காதலனை நம்பி சென்ற 14 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை!

top-news

ஜூன் 3,

சிறுமிகளின் அத்துமீறிய செயல்களால் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பலியாவது அதிகரித்து வருவதாகக் கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat இன்று தெரிவித்தார். 14 வயது இடைநிலைப்பள்ளி மாணவி தனது காதலனைச் சந்திப்பதற்காகப் பேராக்கிலிருந்து கூலிம் கெடாவை நோக்கி தனது தோழியுடன் சுமார் 300 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் வழியில் மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் வாகனமோட்டியிடம் உதவி கேட்ட நிலையில் சம்மந்தப்பட்ட வாகனமோட்டியால் 14 வயது சிறுமியும் அவரின் பெண் தோழியும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.

இப்போதைய சூழலில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களைக் கண்டிக்காமல் வளர்க்கும் பெற்றோர்களின் செயல்பாடுகள் வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாக கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார். பாதிக்கப்பட்ட்ட 14 வயதுள்ள இரு மாணவிகளும் 3 நாள்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.

Seorang remaja perempuan berusia 14 tahun terbabit dengan gangguan seksual apabila menunggang motosikal dengan kawannya dari Perak ke kulim untuk berjumpa dengan kekasihnya. Perkara ini berlaku apabila motornya rosak dan menahan kereta orang awam yang merupakan pelaku bagi kes ini. Ketua Polis menyarankan agar ibu bapa sentiasa memantau tingkah laku anak-anak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *