ஜொகூரில் தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள்! – MET MALAYSIA எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 24,

இன்று அதிகாலை ஜொகூர் சிகாமாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மீண்டுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 6.13 மணிக்குச் சிகாமாட் பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து காலை 9 மணிக்கு மீண்டும் குளுவாங், மலாக்கா, பகாங், நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் MET MALAYSIA தெரிவித்தது. 

4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஒரு சில அடுக்குமாடி வீடுகள் சேதமுற்றாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் காணப்படவில்லை என MET MALAYSIA உறுதிப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ஏற்பட்ட 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதுமில்லை என்றும், தீபகற்ப மலேசியாவில் நிலநடுக்கத்திற்கான பெரிய அபாயம் ஏதும் இல்லை என்றும் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA உறுதிப்படுத்தியுள்ளது. தொடர் ஆய்வுகளுக்காகப் பொதுமக்களின் நலனுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புகளுக்கு முன்னேற்பாடுகளும் பொது சேவை மையங்களால் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA தெரிவித்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *